செய்திகள்

இந்த ராசிக்கு பதவி உயர்வு நிச்சயம்: வாரப் பலன்கள்

10th Jun 2022 04:27 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சுப காரியங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்துகள் வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறையும். பிறருக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராகவே தொடரும். பழைய கடன் வசூலாகும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும்.

ADVERTISEMENT

புதிய கால்நடைகள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெண்களுக்கு புகழ் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.

சந்திராஷ்டமம் - 13,14.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

அந்தஸ்து உயரும். வெளியூர், வெளிநாடுகள் செய்ய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை செய்து முடிப்பர். மேலதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல் - வாங்கல் சீரடையும். கூட்டாளிகளுடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். 

விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும்.  கலைத்துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் பாராட்டைப் பெறுவர். மாணவர்கள் பெற்றோரின் 
அறிவுரை கேட்டு நடப்பர்.

சந்திராஷ்டமம் - 15,16.

இதையும் படிக்கலாம்: 'கைதி' படத்தில் நீக்கப்பட்ட காட்சி - லோகேஷ் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் அகலும்.  பண வரவு கிடைக்கும். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். குழப்பங்கள் மறைந்து தெளிவு கிடைக்கும். புதிய மாற்றங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் இருந்த மந்த நிலை அகலும். கூட்டாளிகள் முயற்சிகளுக்கு கை கொடுப்பர். விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும். அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

கலைத்துறையினர் பொறுப்புடன் செயல்படுவர். பெண்கள் கணவருடன் விட்டுக்கொடுத்து நடப்பர். மாணவர்கள் நற்பெயரை எடுப்பர்.

சந்திராஷ்டமம்- இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார நெருக்கடி குறையும். சீரிய சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செய்தொழிலை திறமையுடன் நடத்துங்கள்.

உத்தியோகஸ்தர்கள் குறித்த காலத்துக்குள் வேலையை செய்து முடிப்பர். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளித்து சாதுர்யமாகச் செயல்படுவர்.

அரசியல்வாதிகள் சூழ்ச்சிகளை முறியடிப்பர். கலைத்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.

பெண்கள் கணவருடன் சுமுக நிலையை காண்பர். மாணவர்கள் துடிப்புடன் செயல்பட்டு, நற்பெயரை எடுப்பர்.
சந்திராஷ்டமம்} இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதை உறுத்தி வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

எதிர்பாராத பயணங்களால் நன்மை கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்களின் நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து பலன் பெறலாம். விவசாயிகளுக்கு புழு, பூச்சித் தொல்லை ஏற்படாது. கலைத்துறையினரின் திறமை வெளிப்படும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து செல்வார்கள். பெண்கள் ஆன்மிகத்தில்  ஈடுபடுவர். மாணவர்கள் கல்வியில் புதிய மைல் கல்லை எட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சிந்தித்துப் பேசுவீர்கள். கண்ணியத்துடன் நடப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் வருமானம் உயரத் தொடங்கும். வியாபாரிகள்புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் நீர்வரத்து அதிகரிப்பால்,  பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.

கலைத்துறையினர் சுலபமாக முன்னேற்றம் அடைவார்கள். பெண்கள் பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவர்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

புதிய முயற்சிகளில் திறம்பட ஈடுபடுவீர். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.  முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் காணப்படும். புதிய நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் கவனத்துடன் இருப்பது அவசியம்.  விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிட்டு கூடுதல் வருவாய் பெறுவர். அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணிபுரிந்து, நல்ல பெயரை எடுப்பர்.  

கலைத்துறையினர் அனுசரித்து நடப்பர்.  பெண்களுக்கு கணவர் வழி உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் உள்விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

சந்திராஷ்டமம்- இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் பாகப் பிரிவினை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சாதகமான சூழ்நிலையைக் காண்பார்கள்.

விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.  அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை.

கலைத்துறையினரின் திறமை வெளிப்படும். பெண்கள் குதூகலமாகப் பொழுதைக் கழிப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர்.
சந்திராஷ்டமம் -  இல்லை.

இதையும் வாசிக்கலாம்: பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கடன் ஏற்படாது. பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தோர் ஒற்றுமையாகச் செயல்படுவர்.

வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்பைப் பெறுவர்.

வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடுவார்கள். விவசாயிகளுக்கு நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினர் பயணம் மேற்கொள்வர். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவர். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் ஏற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணத்தில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் போட்டிக்கேற்ப விலையை நிர்ணயித்து லாபம் பெறுவர்.

விவசாயிகளுக்கு நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள்.

கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவர்.  பெண்கள் எதிர்பாராத உதவிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவர். மாணவர்கள் புதிய படிப்பில் சேருவர்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மதிப்பும் கௌரமும் உயரும். பெற்றோரின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும்.  சிலர் சொத்துகளை வாங்குவர். உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளுவை பகிர்ந்துகொள்வர். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவர்.  விவசாயிகளுக்கு புதிய குத்தகை கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் புகழ் உயரும்.  வருமானம் பெருகும். கலைத்துறையினர் புதிய படைப்புகளால் கற்பனை சக்திகளை உருவாக்குவர். பெண்களுக்கு மதிப்பு உண்டாகும்.  மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெறுவர்.

சந்திராஷ்டமம் - 10.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சுப காரியங்கள் நடக்கும்.  தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர். உங்களின் கீழ் பணியாற்றுவோருக்கு உதவிகளைச் செய்வீர். குழந்தைகளும் பேச்சை கேட்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவம், அந்தஸ்து கூடும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.  விவசாயிகளின் பழைய குத்தகை பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப வருமானம் இரட்டிப்பாகும். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவர்.

சந்திராஷ்டமம் - 11,12.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT