செய்திகள்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்!

தினமணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வரும் திங்கள்கிழமை பிரதோஷமும், புதன்கிழமை பௌர்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன.

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு திங்கள்கிழமை முதல் (டிச. 5 முதல் டிச. 8) 4 நாள்கள் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதனால் பல ஊர்களில் இருந்தும் வந்த பக்தர்கள் சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT