செய்திகள்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

12th Aug 2022 04:58 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனதில் புதிய தெளிவு பிறக்கும்.  குடும்பத்தினர் மதித்து நடப்பார்கள்.   பிறரிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். உபரி வருவாயை சீரிய வகையில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் புதிய இடங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.  விவசாயிகள் புதிய கழனிகளை வாங்குவார்கள்.  

அரசியல்வாதிகள் பிறரை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் கௌரவம் குறைவான இடங்களிலிருந்து ஒதுங்கி விடுங்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும்.

ADVERTISEMENT

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

கவனத்துடன் திட்டமிட்டு காரியமாற்றுங்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படுங்கள். விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். அநாவசியப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.  உத்தியோகஸ்தர்களின் கூடுதல் வேலைகளை உடன் பணிபுரிவோர் பகிர்ந்துகொள்வார்கள்.

விவசாயிகள் கால்நடை தீவனங்களுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும்.  கலைத்துறையினர் செலவு
களைக் குறைத்துக் கொள்ளவும்.

பெண்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மாணவர்கள் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அரசு வழியில் பிரச்னைகள் குறையும்.  சுப காரியங்கள் நடைபெறும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் அரிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடவும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்துக்குத் தீட்டும் திட்டங்கள் பலிதமாகும்.

கலைத்துறையினர் சிந்தித்துச் செயல்படுவார்கள். பெண்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார்கள். மாணவர்கள் யோகா கற்றுக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - 12.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்ப்புகளில் வெற்றி பெறுவீர்கள். சிந்தித்து காரியமாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வார்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயல்களைச் செய்து, கட்சிப் பணியாற்றுவார்கள்.  

கலைத்துறையினரின் கனவுத் திட்டங்கள் பலிதமாகும். பெண்கள் குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்}13, 14.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள்.  அரசு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் தங்களது கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகள் கூட்டாளிகளுடன் புதிய முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவார்கள். விவசாயிகளுக்கு உடனுழைப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  அரசியல்வாதிகள் புத்துணர்ச்சியுடன் பணியாற்றுவார்கள்.

கலைத்துறையினர் ரசிகர்களின் பிரச்னைகளைப் பூர்த்தி செய்வார்கள். பெண்கள்  கோயில்களுக்குச் சென்றுவருவார்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகளைப் புரிவார்கள்.

சந்திராஷ்டமம்} 15,16.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனதை உறுத்திய விஷயங்களுக்குப் புரிதல் கிடைக்கும். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு  உதவி செய்வார்கள். வியாபாரிகள் புதிய அணுகுமுறையால் வருமானம் கூடக் காண்பார்கள். விவசாயிகளுக்கு பழைய குத்தகை பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாகாமல் செயல்படுவார்கள்.

கலைத்துறையினர் புகழ் பெறுவார்கள். பெண்கள் குடும்பத்தாருடன் பாசத்துடன் பழகுவார்கள். மாணவர்கள் கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம் - 17,18.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.   உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து, வேலைகளைச் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகள் புதிய குத்தகைகளை யோசித்து எடுக்கவும்.  அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்து நற்பெயரை எடுப்பார்கள்.  

கலைத்துறையினர் திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பார்கள்.  பெண்கள் கவனத்துடன் இருக்கவும். மாணவர்கள் ஆரோக்கியம் மேம்பட பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சொத்துகளை வாங்குவீர்கள். புதிய வீட்டுக்கு மாறுவார்கள். தொழிலில் குழப்பம் ஏற்பட்டு விலகும். பயணங்களால் புதிய ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதியத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் கடன்களை தீர்ப்பார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கலைத்துறையினரின் தனித்திறன்கள் மேம்படும். பெண்கள் குடும்பத்தில் சகஜமான சூழலைக் காண்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கனவுகளை நனவாக்க முயல்வீர்கள்.  உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.  குடும்பத்தில் பொறுப்புகள் கூடும்.  பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மாற்றங்களைக் காண்பார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளைக் கச்சிதமாகச் செய்து முடிப்பார்கள்.

கலைத்துறையினரின் செயல்திறனை மற்றவர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள்.  பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பார்கள்.  மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.  தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் 
அலுவலகத்தில் புதிய பாடங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் மறைமுக எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் அவமானங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெற முயற்சி செய்வார்கள். பெண்களுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரத் தொடங்கும்.

மாணவர்கள் சிறப்பான மதிப்பெண் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எதிர்த்தவர்கள் தானாகவே அடங்கிவிடுவார்கள்.  உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். பெற்றோரின் மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வார்கள் வியாபாரிகள் கூட்டாளிகளின் பேச்சைக் கேட்பார்கள்.  விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் மூலம் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையினர் சாதகமான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

பெண்கள் கருத்துகளை பிறரும் கேட்பார்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழில் மேன்மையடையும். பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.

வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கல் விஷயங்களில்  திருப்பங்களைக் காண்பார்கள். விவசாயிகள் சிக்கனமாக இருந்து சேமிப்புகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.  

அரசியல்வாதிகள் தைரியத்துடன் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினர் மாற்றுவழிகளைச் சிந்தித்து, அதில் வெற்றி பெறுவார்கள்.

பெண்கள் குடும்பத்தாரிடம் பாசத்துடன் நடப்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT