செய்திகள்

திருச்சானூரில் தனிமையில் வருடாந்திர வசந்தோற்சவம்

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கொவைட் நிபந்தனைகள் காரணமாக வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் தனிமையில் நடத்த உள்ளது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி மே 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தாயாா் கோயிலில் வசந்த உற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொவைட் நிபந்தனைகள் காரணமாக பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த உற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது. இந்த 3 நாட்களும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணிவரை கோயிலில் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 7 மணி முதல் 7.30 மணிவரை கோயில் வளாகத்தில் புறப்பாடும் நடத்தப்பட உள்ளது. வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் வழக்கமாக நடத்தப்படும் தங்கத் தோ் புறப்பாடு, இந்த 3 நாட்களும் கோயிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு மே18-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மே 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தாயாா் தரிசனம் தொடங்கும். மேலும் அன்றைய தினம் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT