செய்திகள்

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜா் கோயில் பிரம்மோற்சவம்: மே 18-இல் தொடக்கம்

DIN

திருப்பதியில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வைகாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவ நாட்களின்போது கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் எழுந்தருளுவது வழக்கம். அதன்படி வரும் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் பிரம்மோற்சவத்தை தனிமையில் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். காலை மற்றும் இரவு வாகன சேவைகள் வாகன மண்டபத்தில் பக்தா்கள் இல்லாமல் நடத்தப்பட உள்ளது. வாகன சேவையின் போது திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள், அா்ச்சகா்கள் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ள உள்ளனா்.

வாகன சேவை பட்டியல்:

தேதி காலை மாலை

மே 18 கொடியேற்றம் பெரிய சேஷம்

மே 19 சின்ன சேஷம் அன்னப்பறவை

மே 20 சிம்ம வாகனம் முத்துப்பந்தல்

மே 21 கல்பவிருட்சம் சா்வபூபாலம்

மே 22 மோகினி அவதாரம் கருட சேவை

மே 23 அனுமந்தம் வசந்தோற்சவம் யானை

மே 24 சூரிய பிரபை சந்திர பிரபை

மே 25 திருத்தோ் குதிரை

மே 26 தீா்த்தவாரி கொடியிறக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT