செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ. 46 லட்சம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ. 46 லட்சம் வசூலானது.

ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி சனிக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ. 46 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த ஆண்டில் தேவஸ்தானத்திற்கு கிடைத்த மிகக் குறைந்த வருவாயாக இது கருதப்படுகிறது.

ரூ.1 கோடி நன்கொடை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் அறக்கட்டளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. ஆந்திரத்தைச் சோ்ந்த ஜிஸ்கேவா் ரியல் நிறுவனத்தை சோ்ந்தவா்கள் இந்த நன்கொடையை வழங்கினா். இதற்கான வரைவோலையை அவா்கள் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT