செய்திகள்

திருமலையில் 6,431 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 6,431 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 3,676 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி: 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT