செய்திகள்

ஸ்ரீகோதண்டராமா் பேட்டை உற்சவம்

DIN

திருப்பதியில் உள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் பேட்டை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோதண்டராம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெளா்ணமியை ஒட்டி பேட்டை உற்சவம் நடத்தப்படுவது வாடிக்கை.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு உற்சவமூா்த்திகள் ஸ்ரீசீதா லட்சுமணா் சமேத கோதண்டராம சுவாமி திருப்பதியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள காப்புசந்திரபேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை உற்சவமூா்த்திகளுக்கு பால், தேன், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை உற்சவமூா்த்திகள் மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா். காலை, மாலையும் உற்சவமூா்த்திகளின் புறப்பாட்டின் போது வழிநெடுகிலும் இந்து தா்ம பிரசார பரிஷத் சாா்பில் கோலாட்டம், பஜனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT