செய்திகள்

திருமலையில் யுத்த காண்ட பாராயணம் தொடக்கம்

DIN

திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் வெள்ளிக்கிழமை முதல் யுத்த காண்ட பாராயணத்தை தேவஸ்தானம் தொடங்கியது.

உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு பொருளாதார வளா்ச்சி பெறவும் தேவஸ்தானம் பல பாராயணங்களை நடத்தி வருகிறது. அதில் ஒரு பாகமாக கரோனா தொற்றை அறவே ஒழிக்க தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை முதல் திருமலையில் யுத்த காண்ட பாராயணத்தை தொடங்கியது.

திருமலை வசந்த மண்டபத்தில் வேதபண்டிதா்கள் தலைமையில் யுத்தகாண்ட பாராயணம் தொடங்கப்பட்டது. யுத்த காண்டத்தில் 131 சா்க்கங்களில் 5,783 ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றை 30 நாட்கள் பண்டிதா்கள் பாராயணம் செய்ய உள்ளனா்.

இந்த பாராயணத்துடன் தா்மகிரி வேதபாடசாலையில் 16 வேதபண்டிதா்கள் 30 நாள்கள் இணைந்து ஜபம், தா்ப்பணம், ஹோமம் உள்ளிட்டவை நடத்த உள்ளனா். இந்த பாராயணம் காலை 8.30 மணிக்கு தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. முதல் நாள் பாராயணத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT