செய்திகள்

பணவரவு திருப்திகரமாக இருக்கப்போகிறது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (ஜன.22-28)

22nd Jan 2021 01:50 PM

ADVERTISEMENT

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (ஜனவரி 22 முதல் ஜனவரி 28 வரை) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எதிர்பாராத வகையில் பொருள்கள் சேரும். குடும்பத்தில் சற்று சஞ்சலங்கள் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. பயணங்களால் லாபம் எதுவும் இல்லை. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயமாக சிறு பயணங்கள் செய்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுடன் உங்கள் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகள் கால தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். கடுமையாக உழைத்து முன்னேறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளாலும் நல்ல லாபம் காண்பார்கள். 

ADVERTISEMENT

அரசியல்வாதிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். கலைத்துறையினர் சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பாடங்களை உடனுக்குடன் படிக்கவும்.  

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

====

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

அரசு ஆதரவு தக்க சமயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இதுவரை தடையாக இருந்த எதிரிகள் தாங்களாகவே விலகி விடுவார்கள். புதிய சூழ்நிலைகளில் வாழ 
உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வியாபாரிகள் தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். 

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் லாபம் கூடும். கால்நடைகளால் நன்மை அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் சமூக நன்மைக்காகப் பாடுபடுவீர்கள். புதிய தொண்டர்கள் கிடைப்பார்கள். கலைத்துறையினருக்கு புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். கலை விழாக்களில் கலந்துகொண்டு வருமானம் ஈட்டுவீர்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவார்கள். குடும்பத்தில் செலவினங்கள் அதிகரிக்கும். 

மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டையும் அன்பையும் பெறுவீர்கள். படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். 

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளியைப் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 22, 24.  

சந்திராஷ்டமம்: இல்லை. 

====
மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சுபச் செலவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு உண்டாகும். செய்தொழிலில் சாதனைகள் செய்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். தெளிவாகச் சிந்தித்து முடிவெடுப்பது நன்மையைத் தரும். 

உத்தியோகஸ்தர்கள் இலக்குகளை நிர்ணயித்து வேலைகளை முடிக்கவும். அலுவலக வேலைகளில் சிக்கல்கள் வந்தாலும் அவை விலகிவிடும். வியாபாரிகள் நண்பர்களின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மகசூல் பெருகும். லாபம் சற்று குறைந்து காணப்படும். 

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படும். கலைத்துறையினர் வேலைகளுக்கு நடுவே சற்று ஓய்வு எடுப்பது நல்லது. உங்கள் கனவுகள் பலிக்கும். பெண்மணிகளுக்கு உடல்நலம் சீராக இருக்கும். கணவருடனான ஒற்றுமை மேம்படும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும். உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்யவும். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

===

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் கவலைகள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை உங்கள் கனிவான பேச்சினால் கவர்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். சகல காரியங்களிலும் வெற்றி வந்து குவியும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். புகழும் நற்பெயரும் உண்டாகும். பெண்மணிகள் கணவரின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். உறவினர்களின் வருகை திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். செலவினங்கள் அதிகரிக்கும். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். 
மாணவர்கள் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 

பரிகாரம்: குருவின் பாத தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

====

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். உடன்பிறந்தோரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழ்வீர்கள். நட்பு வலுப்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் சகஜமாகப் பழகவும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமாராக நடைபெறும். வரவேண்டிய பணம் அனைத்தையும் வசூலிக்கத் தொடங்கி விடுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை எடுப்பதில் அவசரம் காட்டாதீர்கள். உழைப்பிற்கேற்ற பலனை அடைய சற்றுத் தடங்கல் ஏற்படும். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் வெற்றிபெற முன்கூட்டியே தயார் நிலையில் இருந்து செயல்படவும். கலைத்துறையினர் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

பெண்மணிகள் குடும்பத்தினருடன் பரஸ்பரம் அன்பு காட்டுவீர்கள். அண்டை அயலாருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் சிறந்து விளங்க விடியற்காலையில் எழுந்து படிக்கவும். கடின உழைப்புடன் ஆசிரியர் சொல் கேட்டு நடக்கவும். 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட நலன்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 22, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

====

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பணவரவு சரளமாக இருக்கும். எல்லா காரியங்களிலும் மென்மையான போக்கு தேவை. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் இறுதியில் வெற்றி காண்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். அலுவலக வேலைகள் சற்று இழுபறியாகத்தான் இருக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து புதிய முயற்சிகளில் ஈடுபடவும். சிக்கல்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம். விவசாயிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். 

அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில நல்ல காரியங்கள் நடைபெறலாம். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு உடல்நலம் சீராக இருக்கும். கணவருடனான ஒற்றுமை நீடிக்கும். மெüனமாக இருப்பது பல விஷயங்களில் நல்லது. மாணவமணிகள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். படிப்பில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.  

பரிகாரம்: அம்பாளை தரிசித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: 22. 

====

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். சமூக சேவைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கடமைக்கு முதலிடம் கொடுத்து உழைப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்கவும். சக ஊழியர்களிடம் மனஸ்தாபம் உண்டாகும். அதனால் அமைதி காக்கவும். வியாபாரிகள் சாதுர்யத்துடன் செயல்பட்டு நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். விவசாயிகள் கால்நடைகளுக்காக செலவழிக்க வேண்டிவரும். மகசூலில் நல்ல லாபம் இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் நன்மைகள் நடக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடத் தொடங்கும். 

பெண்மணிகளுக்கு இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அனைவருடனும் கலகலப்பாக பழகுவீர்கள். மாணவமணிகள் தேர்வுகளைப் பயமின்றி சந்திக்க கூர்ந்து கவனித்துப் படிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் கலந்தாலோசித்து படிக்கவும். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 27. 

சந்திராஷ்டமம்: 23, 24, 25. 

====

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். உங்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிட்டுப் பேசியவர்கள் தற்போது உயர்வாக நினைப்பார்கள். உங்கள் தன்னம்பிக்கை உயரும். உங்கள் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வேலைப்பளு சற்று குறையும். வியாபாரிகளுக்கு பழைய பொருள்கள் விற்பனையில் லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சீரான வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் மூலம் லாபம் கிடைக்கும். விளைச்சல் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். 

பெண்மணிகளுக்கு குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட அனைவருடனும் சகஜமாகப் பழகி வரவும்.மாணவமணிகள் பாடங்களை அதிகாலையில் எழுந்து படிக்கவும். நீங்கள் நினைத்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமானதினங்கள்: 24, 28. 

சந்திராஷ்டமம்: 26, 27. 

====

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முன்பே தெரிந்து கொண்டு சாதுர்யமாக முறியடிப்பீர்கள். பயணங்களில் எச்சரிக்கை தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு கூடும். சிறிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் நல்ல பலனைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உங்களை மதித்து நடப்பார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகள் தானியங்களில் நல்ல மகசூலை காண்பீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் எதிர் கட்சியினரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நண்பர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெண்மணிகள் தங்கள் உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். கணவரிடம் ஒற்றுமை ஓங்கும்.

மாணவமணிகள் பெற்றோர் சொல் கேட்டு நடக்கவும். ஆசிரியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபட்டு வரவும். 

பரிகாரம்: ஸ்ரீசனீஸ்வர பகவானை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 27. 

சந்திராஷ்டமம்: 28. 

====

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கடன் தொல்லைகள் இருக்காது. அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுப்பதையும், ஜாமீன் போடுவதையும் தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்கள் சிறிது தாமதமாக நிறைவேறும். பணப் புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். உங்கள் வேலைகளை நீங்களே கவனத்துடன் செய்து முடிக்கவும். வியாபாரிகள் போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக அமையும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவதில் சில தடைகள் ஏற்படும். சவால்களை சமாளித்து விடுவீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கட்சியில் உங்கள் மதிப்பு மரியாதை உயர்ந்து காணப்படும். கலைத்துறையினரின் வருமானத்திற்கு குறைவு வராது. வாய்ப்புகள் தேடிவரும். 
பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் சுபிட்சம் காணப்படும். வாக்கு சாதுர்யம் கூடும். மாணவமணிகள் தங்கள் கவனத்தைச் சிதற விடாமல் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தவும். விடியற்காலையில் எழுந்து படித்தால் நிறைய மதிப்பெண்கள் எடுக்க உதவியாக இருக்கும். 

பரிகாரம்: சுவாமி ஐயப்பனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

====

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்களின் பெயரும் புகழும் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உண்டாகும். புதிய வீட்டுக்கு மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களிடம் அன்பு ஓங்கும். உழைப்புக்கு நடுவே ஓய்வு என்பது அரிதாகும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். மேலதிகாரிகளுடன் சுமுகமான உறவு நீடிக்கும். வியாபாரிகளுக்கு புது புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபாரம் நல்லபடியாக விருத்தியடையும். விவசாயிகளுக்கு நீர்வரத்து பெருகி வளம் சூழும். மகசூல் அதிகரித்து லாபம் கொட்டும். 

அரசியல்வாதிகள் கடன்கள் வாங்கி உங்கள் வேலைகளைச் செய்ய வேண்டாம். உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகும். புதிய முயற்சிகளில் வெற்றி நடை போடுவீர்கள். 

பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். சிறந்த மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். உடற் பயிற்சிகளில் தவறாமல் ஈடுபட்டு வரவும். 

பரிகாரம்: பழனி ஆண்டவரின் தரிசனம் வாழ்வில் உயர்வு தரும். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

====

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். எல்லோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர் புகழ் உயரும். முக்கியமான விஷயங்களில் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மேலதிகாரிகளின் மூலம் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரிகள் தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரித்து வரவும். கடின உழைப்பின் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகள் பிரசாரங்களுக்காக கடினமாக உழைக்க வேண்டி வரும். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு தந்தைவழி உறவினர்களால் சில மனக்கசப்புகள் உருவாகி மறையும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். மாணவமணிகள் மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களைப் படிக்கவும். விடியற்காலையில் எழுந்து படிப்பது நல்லது.  

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு சிறந்தது. 

அனுகூலமான தினங்கள்: 24, 27.

சந்திராஷ்டமம்: இல்லை. 

Tags : வாரப் பலன்கள் weekly predictions
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT