செய்திகள்

விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது இந்த ராசிக்காரர்களுக்கு: வாரப் பலன்கள்

2nd Jan 2021 12:04 PM

ADVERTISEMENT

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (01.01.21 முதல் 07.01.21) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். எடுத்த காரியங்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கொள்வீர்கள். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும்.   

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் வாங்குவீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வெற்றிப்பாதையில் நடைபோடுவீர்கள். துணிச்சல் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான செலவு அதிகரிக்கும். மற்றபடி விளைச்சல் பெருகி லாபம் கூடும்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகள் எவரிடமும் திறந்த மனதோடு பேசாதீர்கள். வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் பெருகும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பால் சிறிது வளர்ச்சி அடைவீர்கள். 
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் கலகங்களும் குழப்பங்களும் அதிகரிக்கும். வாயைக் கட்டிக் காப்பது பல விஷயங்களுக்கும் நல்லது. மாணவமணிகள் கவனத்துடன் பாடங்களைப் படிக்கவும். ஞாபக சக்தி வளர அதிகாலையிலேயே எழுந்து படிக்கவும்.  

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 01,02 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சகஜ நிலை உருவாகும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.  

உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப்பளு சற்று குறையும். வியாபாரிகள் தங்கள் உறவினர்களின் ஒத்துழைப்புடன் புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள். கொள்முதலில் லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சுமூகமாக முடியும். 

அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். கட்சியில் முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தும் காலமாக இது அமையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவருடன் மன வேறுபாடு ஏற்படும். கணவரைப் புரிந்து கொண்டு நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபடுவீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 01, 03. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் பலம் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையத் தொடங்கும். குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். பிரயாணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடனான பிரச்னைகள் ஓங்கும். வேலையில் நிம்மதி இருக்காது. 

வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். அவசியமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்து விற்கவும். விவசாயிகளுக்கு அமோகமான விளைச்சலால் லாபம் அதிகரிக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் நற்பெயர் எடுப்பீர்கள். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். விருந்து, கேளிக்கை என்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துங்கள். மாணவமணிகள் பாடங்களை உடனுக்குடன் படித்து வரவும். கல்வியில் இயல்பாகவே ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 02, 03.

சந்திராஷ்டமம்: இல்லை.

******

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் செயல் முறைகளில் மாற்றம் தெரியும். வருமானத்தைப் பெருக்குவீர்கள். வழக்கமான பணிகள் சிறப்பாக நிறைவேறும். கூட்டாளிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் முடிவுகளைத் தெளிவாக செயல்படுத்தத் துணிவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் லாபகரமாகவே இருக்கும். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய யுக்தியுடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்கலாம். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் பிரசாரங்களில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். ரசிகர்களின் அன்புக்காக நீங்களும் நிறைய உதவி செய்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருவரும் பரஸ்பரம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் உதவியுடன் மேன்மை அடைவீர்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 03, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

******
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தீயவர்களின் சகவாசம் மறைந்து நல்லவர்களுடன் நட்பு தொடரும். சகோதர, சகோதரிகளிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. செய்தொழிலில் தேவைக்கேற்ற வருமானம் வரும்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயிகள் ஓய்வின்றி உழைக்க நேரிடும். கால்நடைகள் மற்றும் பால் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். பிரசாரத்தில் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளுக்கு கடும் போட்டி இருக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.  மாணவமணிகள் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு பெரிய சாதனைகளுக்கு அடித்தளமிடுவீர்கள். கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். 

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 01, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்களின் பொருளாதார நிலை உயரும். நேர்வழியில் சிந்தித்து, உங்களது செயல்களைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். வருமானம் படிப்படியாக உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் சற்று சிரமங்களைச் சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை இப்போது எடுக்க வேண்டாம். மகசூல் சற்று மந்தமாகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு உழைக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழும் நற்பெயரும் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு வருமானம் சிறப்பாக இருப்பதால் விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவ மணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள்.  

பரிகாரம்: மஹா விஷ்ணுவை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 02, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்கள் பெயரும் புகழும் உயரும். நன்கு ஆலோசித்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சிகளைத் தினமும் செய்யவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் விற்பனையைப் பெருக்குவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் பயணங்களைத் தள்ளிப்போடவும். அனைவரிடமும் மிகவும் ஜாக்கிரதையாகப் பழகவும். கலைத் துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் சேரும். மாணவமணிகளின் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆசிரியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  02, 06.

சந்திராஷ்டமம்:  இல்லை.

******

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் நெடுநாளைய ஆசை நிறைவேறும். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். தைரியத்துடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பார்வை உங்கள் மீது விழும். வியாபாரிகள் முதலீடு அதிகம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் ஆதாயம் ஏற்படும். மகசூல் பெருகி நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் திடமான சிந்தனையுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் பேச்சு சிறக்கும். உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். 

பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவ மணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 03, 05. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். உணவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைச் சரியாக செய்து முடிப்பீர்கள். உங்களின் செயல்பாடுகளில் தனித்தன்மை பளிச்சிடும். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளிடம் மனம் திறந்து பேசுவதைக் குறைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதுப்புது உபகரணங்களை வாங்குவீர்கள். நீர்வரத்து அதிகரிப்பால் விளைச்சல் பெருகி, லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். தொண்டர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த விரும்புவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கும். புதுப் புது ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். மாணவமணிகள் விளையாடும் நேரத்தில் கவனம் தேவை. தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.  

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 03, 07. 

சந்திராஷ்டமம்: 01, 02.

******

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை அடைவீர்கள். செய்தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். நேர்மையுடன் பணியாற்றி நற்பெயர் வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களால் ஆதாயமடைவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமூகமாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்யாமல் வியாபாரத்தை சீர்படுத்த முயற்சிக்கவும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபத்தைப் பெறலாம். 

அரசியல்வாதிகள் பிறரிடம் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். எவரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நல்ல பலனை அடைவீர்கள். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் சிறிய முயற்சிகளுக்குப் பிறகு திரும்பவும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். 

பரிகாரம்: திருவேங்கட நாதரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 01, 07. 

சந்திராஷ்டமம்: 03, 04.

******

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தினர் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பணியிடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டுத்தொழில் உதவாது. எவருக்கும் கடன் கொடுப்பதோ, முன் ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேண்டாம். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள். கால்நடைகளால் லாபமுண்டு. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும். சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வழிகளிலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மன தைரியத்தைக் கைவிடாமல் உழைப்பீர்கள். 

பெண்மணிகளைப் பொருத்தவரை ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களைச் சிரத்தையாகப் படித்து வரவும். 

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 07. 

சந்திராஷ்டமம்: 05, 06.

******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். நன்மை, தீமைகளை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். 

உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் நல்ல வருமானம் ஈட்டுவார்கள். கடுமையான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவீர்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளை உயர்பதவிகள் தேடிவரும். நினைத்த காரியம் கைகூடும். கலைத்துறையினரின் திறமைகள் வெளியில் தெரியத் தொடங்கும். ரசிகர்களின் அன்பில் மகிழ்ச்சி அடைவீர்கள். 

பெண்மணிகள் பிறரிடம் பேசும் நேரத்தில் கவனம் தேவை. பணவரவுக்கு எந்தக் குறையும் இருக்காது. இல்லத்தில் மழலை சப்தம் கேட்கும். மாணவமணிகள் நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். படிப்பைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்த வேண்டாம். 

பரிகாரம்: பார்வதி, பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  05, 06. 

சந்திராஷ்டமம்: 07.

Tags : weekly predictions
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT