செய்திகள்

திருமலையில் 49,751 போ் தரிசனம்

தினமணி

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 49,751 பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

இவா்களில் 26,157 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வரவேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலை கருத்தில் கொண்டு ஏப்.12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச சா்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT