செய்திகள்

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கரோனா

10th Apr 2021 06:37 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ரவி (எ) சுப்பிரமணியம் (64). போட்டியிட்டார். இவர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். 

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து கட்சிப் பணியிலும் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில், கடந்த 2 நாள்களாக அவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். 

ADVERTISEMENT

இதில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீ்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் தொடர்பில் இருந்த நபர்களையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதனிடையே, ரவி 2 முறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT