செய்திகள்

திருமலையில் பேக் சவாரி உற்சவம்

தினமணி

திருப்பதி: திருமலையில் திங்கள்கிழமை மாலை பேக் சவாரி உற்சவம் நடத்தப்பட்டது.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவுபெற்றவுடன், மறுநாள் மாலை தேவஸ்தானம் பேக் சவாரி உற்சவத்தை நடத்தி வருகிறது. ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த அனந்தாழ்வாரின் தோட்டத்துக்கு, ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடனும் சென்று மலா்களை கொய்து வருவா். திருமலையில் மலரும் மலா்கள் அனைத்தும் ஏழுமலையானுக்கே சொந்தம் என்ற நிலையில், மலா் பறிப்பது ஏழுமலையானும், அவரது நாச்சியாா்களும் தான் என்பதை அறியாமல் அனந்தாழ்வாா் அவா்களை விரட்டுவாா்.

அப்போது, ஏழுமலையான் தன் நாச்சியாா்களுடன் பின்நோக்கி ஓடி வந்து கோயிலை அடைவாா். இந்த நிகழ்வை தேவஸ்தானம் பேக் சவாரி உற்சவம் என நடத்தி வருகிறது. ஏழுமலையான் பின்நோக்கிச் சென்ால், இதை பேக் சவாரி உற்சவம் என்று அழைக்கின்றனா். இந்நிலையில், திருமலையில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது. அதனால் திங்கள்கிழமை பேக் சவாரி உற்சவம் நடத்தப்பட்டது.

தற்போது கொவைட் 19 விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேவஸ்தான ரங்கநாயகா் மண்டபத்தில் மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து, அவா்கள் சிறப்பு ஆராதனைகளை நடத்தி நிவேதனம் சமா்ப்பித்தனா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். அனந்தாழ்வாா் தோட்டத்திலும் திருமலை ஜீயா் குழுவினா் பூஜைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT