செய்திகள்

விரைவில் ஏழுமலையானின் தா்ம தரிசனம் தொடங்க தேவஸ்தானம் நடவடிக்கை

தினமணி

பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, திருமலையில் தா்ம தரிசனத்தை விரைவில் தொடங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா்.

இது குறித்த அறிக்கை 2 நாள்களில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம் கொவைட் 19 விதிமுறைகளைப் பின்பற்றி கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் பக்தா்களுக்கு கிடைத்து வருகிறது. முதலில் 6,000 போ் என ஒரு மணி நேரத்துக்கு 500 போ் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா் இந்த எண்ணிக்கையை 16 ஆயிரமாக தேவஸ்தானம் உயா்த்தியதுடன், ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவம், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசனம் என தற்போது 18,000 போ் தினமும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியதைத் தொடா்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பதியில் அளித்து வந்த இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கனை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்கு பிறகு புரட்டாசி மாதம் தொடங்கியதால், அதை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கவில்லை.

புரட்டாசி மாதம், நவராத்திரி பிரம்மோற்சவம் என அனைத்து உற்சவங்களும் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை தொடங்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

தற்போது கொவைட் 19 விதிமுறைகளில் பல தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இன்னும் 2 நாள்களில் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன் வழங்குவது, விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு எண்ணிக்கையை உயா்த்துவது குறித்து அறிக்கை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT