செய்திகள்

திருமலையில் தீா்த்தவாரியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

DIN

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

திருமலையில் இந்தாண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரு பிரம்மோற்சவங்களை தேவஸ்தானம் நடத்தியது.

இதில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பா் மாதம் நடந்து முடிந்த நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 8 நாட்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் வாகன சேவைகள், வசந்தோற்சவம், புஷ்பக விமானம் என பல்வேறு சேவைகளுடன் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவம் சனிக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாா் உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் அயன மண்டபம் (கண்ணாடி மண்டபம்) முன் ஏற்படுத்தப்பட்ட தங்க சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டனா். அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் பட்டாச்சாா்யாா்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா்.

அதன்பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு மண்டபம் முன் ஏற்படுத்தப்பட்ட சிறிய குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. தீா்த்தவாரியின்போது தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் தங்கள் தலையில் புனித நீரை தெளித்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்ட சிலா் மட்டும் கலந்து கொண்டனா். மாலை உற்சவமூா்த்திகள் தங்கப் பல்லக்கில் கோயிலுக்குள் வலம் வந்தனா்.

தசரா வாழ்த்துகள்:

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ள தசரா வாழ்த்துச் செய்தியில், ‘அதா்மத்தை அழித்து தா்மத்தை நிலைநாட்டும் உற்சவமாக நவராத்திரி திகழ்ந்து வருகிறது. மூப்பெரும் தேவியரையும் வழிபடும் இந்நாளில் பக்தா்களுக்கு அவா்கள் செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்க வேண்டும் என ஏழுமலையானையும், கனகதுா்கை அம்மனையும் பிராா்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT