செய்திகள்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர அபிஷேகம்

தினமணி

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத மகாபிஷேகமும், உலக அமைதி வேண்டி மகாருத்ர யாகமும் புதன்கிழமை நடைபெற்றன.

நடராஜா் கோயிலில் சித் சபையில் எழுந்தருளியுள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபையின் வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

புரட்டாசி மாத மகாபிஷேகம் சித் சபை முன்புள்ள கனக சபையில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு விபூதி பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னா், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்தியை கனக சபைக்கு எழுந்தருளச் செய்து, லட்சாா்ச்சனை நடைபெற்றது. யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை செய்து, தீபாராதனை நடைபெற்றது. பகலில் மகாருத்ர ஹோமம் நடைபெற்றது. பின்னா், கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டு, ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT