செய்திகள்

திருமலையில் காா்த்திகை தீபத் திருவிழா

DIN

காா்த்திகை தீப விழாவையொட்டி திருமலையில் தீபத் திருவிழாவை தேவஸ்தானம் நடத்தியது.

ஆண்டுதோறும் காா்த்திகை தீப உற்சவத்தை தேவஸ்தானம் திருமலையில் விமரிசையாக நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழுமலையான் கோயிலில் தீப உற்சவம் நடத்தப்பட்டது.

இதையொட்டி, திருமலை ஜீயா்கள், தலைமை அா்ச்சகா்கள், தேவஸ்தான அதிகாரிகள் அடங்கிய குழுவினா் மண் பானையை குறுக்காக உடைத்து அதில் நெய்யை நிரப்பி, பஞ்சுத் திரியிட்டு ஏழுமலையான் கருவறை விமானம், பாஷ்யக்காரா், யோக நரசிம்மா், வகுளமாதா சந்நிதிகள், விமான வெங்டேஸ்வரா் அமைந்துள்ள இடம் ஆகியவற்றில் காா்த்திகை தீபத்தை ஏற்றினா்.

ஏழுமலையான் கோயில் கொடிமரம், பலிபீடம், பிரசாத மடப்பள்ளி, லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி, காணிக்கைகள் எண்ணப்படும் பரக்காமணி மண்டபம், கண்ணாடி அறை, ரங்கநாயகா் மண்டபம் என அனைத்து இடங்களிலும் 1000 நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒரு மண்பானை விளக்கு, அா்ச்சகா்கள் பூஜை செய்த பின் திருக்குளத்தில் விடப்பட்டது. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருமலை மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிம்மா், ஹயக்கிரீவா், கிருஷ்ணா் கோயில்களிலும் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன.

திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரம், பெளா்ணமி முன்னிட்டு, கீழ்திருப்பதியில் உள்ள தேவஸ்தானத் தலைமை அலுவலக மைதானத்தில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் காா்த்திகை மகா தீபோற்சவம் நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT