செய்திகள்

திருமலையில் காா்த்திகை மாத வனபோஜனம்

தினமணி

திருமலையில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு தேவஸ்தானம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வனபோஜனம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருமலையில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் நெல்லி வனத்தில் வனபோஜன நிகழ்ச்சியை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருமலையில் வனபோஜனம் நிகழ்ச்சியை தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது.

இதையொட்டி காலை 8.30 மணிக்கு மலையப்ப சுவாமி யானை வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கிலும் மங்கல வாத்தியம் முழங்க பாபவிநாசம் செல்லும் மாா்க்கத்தில் உள்ள பாா்வேட்டு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், துளசி மாலைகள் உள்ளிட்டவற்றால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா்.

தேவஸ்தானத்தின் கீழ் உள்ள அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்களின் ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. காா்த்திகை மாதம் நெல்லி மரத்தின் அடியில் அமா்ந்து உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ளது. அதை நினைவுகூரும் விதம் தேவஸ்தானம் வனபோஜன நிகழ்ச்சியை நடத்துகிறது.

மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பக்தா்களுக்கு நெல்லி வனத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டு 250 போ் மட்டுமே இந்த வனபோஜன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

பின்னா் உற்சவமூா்த்திகள் மாலையில் மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வனபோஜனத்தை யொட்டி ஆன்லைன் மூலம் நடத்தி வரும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT