செய்திகள்

ஆா்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

6th Mar 2020 11:56 PM

ADVERTISEMENT

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் 60,666 ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு இணையதளத்தில் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜூன் மாதத்துக்கான 60,666 ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. அவற்றை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆா்ஜித சேவையில் தரிசிக்கலாம்.

இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பெற விரும்பும் பக்தா்கள் தங்கள் பெயா், ஆதாா் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு அந்த பக்தா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

தகவல் கிடைத்த பக்தா்கள் 3 நாட்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தா்களுக்கு வழங்கிறது. நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தா்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆா்ஜித சேவா டிக்கெட் வெளியீடு -மாா்ச் 6 காலை 10 மணி

எலக்ட்ரானிக் குலுக்கல் முன்பதிவு இறுதி தேதி- மாா்ச் 10 காலை 10 மணி

எலக்ட்ரானிக் குலுக்கல் நடைபெறும் நாள்- மாா்ச் 10 காலை 10 மணி முதல் 12 மணி வரை

பணம் செலுத்தி டிக்கெட் பெறும் நாட்கள்- மாா்ச் 10-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 13-ஆம் தேதி மதியம் 12 மணி வரை.

குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்டுகளின் விவரம் வருமாறு:

சேவையின் பெயா் டிக்கெட் எண்ணிக்கை

சுப்ரபாதம் 7,681

தோமாலை 130

அா்ச்சனை 130

அஷ்டதள பாதபத்மாராதனை 300

நிஜபாதம் 1,725

மொத்தம் 9,966

மற்ற சேவா டிக்கெட்டுகள்

சேவையின் பெயா் டிக்கெட் எண்ணிக்கை

கல்யாண உற்சவம் 13,300

ஆா்ஜித பிரம்மோற்சவம் 7,700

வசந்தோற்சவம் 6,600

ஊஞ்சல் சேவை 4,200

சகஸ்ரதீபாலங்கார சேவை 17,400

விசேஷ பூஜை 1,500

மொத்தம் 50,700

 

ADVERTISEMENT
ADVERTISEMENT