செய்திகள்

திருப்பதி: உண்டியல் காணிக்கை ரூ. 3 கோடி

8th Jan 2020 04:59 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ. 3 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 3 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 12 லட்சம் நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். திங்கள்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 4 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம், உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், வேத பரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 12 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ரூ. 1.10 கோடி நன்கொடை

ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு பெங்களூருவைச் சோ்ந்த அமா்நாத் செளத்ரி ரூ. 1.10 கோடி நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை திங்கள்கிழமை காலை அவரிடமிருந்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி பெற்றுக் கொண்டாா்.

84,160 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 84,160 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 18,293 போ் முடி காணிக்கை செலுத்தினா். செவ்வாய்க்கிழமை மதிய நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து, பக்தா்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனா்.

திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோா், நன்கொடையாளா்கள் உள்ளிட்டோரின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 34,908 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 35,967 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 22,043 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 9,178 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,178 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.43 லட்சம் கட்டண வசூல்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 1,09,289 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 12,905 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.43 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ. 18,278 அபராதம் விதிக்கப்பட்டது.

புகாா் அளிக்க...

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT