திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர தெப்போற்வசத்தின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சோமாஸ்கந்தமூா்த்தி தன் தேவியருடன் தெப்பத்தில் வலம் வந்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தெப்பத்தில் சோமாஸ்கந்தமூா்த்தி 5 முறை வலம் வந்தாா். தெப்போற்சவத்தைக் காண திருக்குளக்கரையில் பக்தா்கள் திரண்டனா். தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூா்த்திக்கு நைவேத்தியம் சமா்ப்பித்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். தெப்போற்சவத்தை முன்னிட்டு, திருக்குளமும், தெப்பமும் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.