செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.06 கோடி

6th Feb 2020 11:29 PM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.06 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.06 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்

ரூ.47 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், போ்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.12 லட்சம், உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.47 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT