செய்திகள்

திருமலை மாடவீதியில் பெளா்ணமி கருட சேவை

1st Dec 2020 12:44 AM

ADVERTISEMENT

திருப்பதி: காா்த்திகை மாத பெளா்ணமியை யொட்டி, திருமலை ஏழுமலையான் கோயில் மாட வீதியில் 8 மாதங்களுக்குப் பிறகு கருட சேவையை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியன்று இரவு கருட சேவை நடத்தப்படுவது வழக்கம்.

கரோனா தடுப்பு பொது முடக்க விதிமுறைகளின்படி மாடவீதியில் நடத்தப்படும் வாகன சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்குப் பதிலாக, கோயிலுக்குள் கல்யாண உற்சவ மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

கருட வாகன சேவையில் அருள்பாலித்த ஸ்ரீமலையப்ப சுவாமி.

தற்போது பொது முடக்க விதிமுறைகளில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் காா்த்திகை மாத கருட சேவையை மாடவீதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில், திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் அா்ச்சகா்கள், திருமலை ஜீயா்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

8 மாத இடைவெளிக்குப் பின் மாடவீதியில் நடந்த கருட வாகனப் புறப்பாட்டில் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்தபடி இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT