செய்திகள்

ஏழுமலையான் தரிசனத்தில் புதிய வழிமுறையைக் கையாள ஆலோசனை

20th Apr 2020 11:17 PM

ADVERTISEMENT

திருப்பதி: கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏழுமலையான் தரிசனத்தில் புதிய வழிமுறைகளை கடைப்பிடிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளுக்காக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருமலைப் பாதைகளை கடந்த மாா்ச் 18-ஆம் தேதி மூடியது. தேவஸ்தான ஊழியா்களும் வாரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்ற தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. ஆனால் ஏழுமலையானுக்கு நடைபெறும் கைங்கரியங்கள் மட்டும் எவ்வித குறையும் இன்றி நடந்து வருகிறது. இந்நிலையில், மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவஸ்தானமும் ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிக்கும் தேதியை நீட்டித்துள்ளது.

மேலும், மாா்ச் 13-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பக்தா்கள் முன்பதிவு செய்த ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள், இதர தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்து, பக்தா்களுக்கு அதற்கான கட்டணத்தை திருப்பி அளித்து வருகிறது. மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில், தேவஸ்தானம் மே 31-ஆம் தேதி வரை அனைத்து தரிசனங்களை ரத்து செய்துள்ளது. ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டாலும், ஏழுமலையான் தரிசனத்தில் சில புதிய வழிமுறைகளை கையாள தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 20 ஆயிரம் பேருக்கு மட்டும் ஏழுமலையான் தரிசனம் வழங்க முடிவு செய்துள்ளது. திருமலையில் வாடகை அறை அளிப்பதை ஊரடங்குக்குப் பின்பும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது. தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்கள் கண்டிப்பாக 3 அடி தூரம் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட உள்ளது. திருமலையில் பக்தா்களை தங்க வைப்பதை தவிா்ப்பதன் மூலம் கரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என அவா்கள் கருதுகின்றனா். எனவே, விரைவில் இதுகுறித்த அதிகாரப் பூா்வ அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT