இந்த வாரம் எந்த ராசிக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26) பலன்களை..
இந்த வாரம் எந்த ராசிக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். உடல்நிலை குறித்து கவனமுடன் இருப்பது நல்லது.
 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவார்கள். பணவரவுடன் உயர் பதவிகளும் தேடி வரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகள் புதிய குத்தகைகள் பெறுவார்கள். மகசூல் அதிகரித்து நன்கு லாபம் காண்பார்கள்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் அனுகூலமாக நடந்து கொள்ளும். புதிய பணிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவர், உற்றார் உறவினர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். வெளிவிளையாட்டுகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். புதுமனை புகுவிழா போன்ற விழாக்களை நடத்துவீர்கள். பொருளாதாரம் சற்று ஏற்றமாகவே காணப்படும். தந்தைவழி உறவினர்களை ஆதரிக்கவும். எதிரிகளின் பலம் குறையும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். மேலதிகாரிகளால் சில சஞ்சலங்கள் உண்டானாலும் தைரியத்துடன் எதையும் சாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். பேச்சுத்திறனால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்
நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். 

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையை அனைவரும் பாராட்டுவர். மேலிடத்தின் மூலம்  புதிய பொறுப்புகளும் கிடைக்கும். கலைத்துறையினரின் வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்திருக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகளின் விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றுவர். பெற்றோர் சொற்படி நடக்கவும்.

பரிகாரம்: புதனன்று பெருமாளைத் தரிசித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சேமிப்பில் ஸ்திரத்தன்மை ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பொருளாதாரத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும். பழைய கடன்கள் சற்று வசூலாகும். தந்தை வழி உறவினர்களிடம் சிறு மனக்கசப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு கோரிக்கைகள் எளிதில் நிறைவேறாது. சக ஊழியர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கிட்டும். கடுமையாக முயற்சித்து மேலும் முன்னேற நினைப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கட்சி மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே வெற்றிகள் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு நடந்து கொள்வார்கள். 

மனதில் காரணமில்லாத குழப்பங்கள் நிலவும். உடல்நலத்திலும் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:  "ராம் ராம்' என்று ஜபித்தபடி ஆஞ்சநேயரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை. 
{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். சேமிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தடைகள் விலகும். பழைய கடன்களைச் செலுத்தி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்துக் கொள்ளவும். நீண்ட தூர பிரயாணங்களைத் தவிர்த்தல் நலம்.

உத்தியோகஸ்தர்களுக்கு படிப்படியாக வேலையில் சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் குறை காண காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும்.  வியாபாரிகள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு லாபம் குறையும். நீரைத் தேக்கி வைக்க நூதன முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சில பிரச்னைகள் தோன்றும். அதனால் கட்சித் தலைமையிடம் அநாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். 

கலைத்துறையினரின் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வேலையில் மட்டும் குறியாக இருக்கவும். பெண்மணிகள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷமடைவர். கணவரின் உடல்நலத்தில் சில குறைபாடுகள் ஏற்படும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: அஷ்டமி நாளில் காலபைரவருக்கு விளக்கேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்: இல்லை. 
 

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிராது. பயணங்கள் அனுகூலமான திருப்பங்களைத் தரும். எதிலும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். எவரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். தாயார் உடல்நலத்தில் அக்கறை தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரிகள் கவனத்துடன் இருந்தால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். புதிய சந்தைகளில் லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு கொள்முதல் வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வார்கள். இருப்பினும் கட்சி மேலிடத்தின்  கோபத்திற்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவைப் பெறுவதில் சிறிது காலதாமதம் ஏற்படும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமி, துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை. 
 

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் திடீரென்று நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தந்தையோடும் உறவினரோடும் அனுசரனை தேவை. வாகனங்கள் ஓட்டும்போது கவனம் கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சிறிது குறைபாடுகள் தோன்றும். அரசாங்கத்தின் மூலம் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. விவசாயிகள் வருமானத்தைப் பங்கு போட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகளின் செயல்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும். கட்சி மேலிடத்திடம் கவனமாக நடந்து கொள்ளவும். எதிர்கட்சியினரிடமும் உஷாராக இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் தடைகள் ஏற்படலாம். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு பெற்றோர் ஆதரவு உண்டு. விளையாட்டுகளில் வெற்றி பெற அதிக சிரத்தை தேவை.

பரிகாரம்: சனியன்று சனீஸ்வரரையும் புதனன்று பார்த்தசாரதிப்பெருமாளையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 24.

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணவரவு நன்றாக இருக்கும். விரயங்களும் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் இராது. திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். மன உறுதியுடன் உங்கள் செயல்களை முடிப்பீர்கள். எவருக்கும் முன்ஜாமீன் தரவேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைத்திறன் அதிகரிக்கும். கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். நண்பர்களின் ஆலோசனை பெற்று செயல்படவும். விவசாயிகளுக்கு லாபம் சுமாராக இருக்கும். புதிய சிக்கல்களும் உருவாகலாம். 

அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். எவரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சாதுர்யமான செயல்களினால் வெற்றி காண்பீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கலந்து கொள்வதும், யோகா, பிராணாயாமத்தில் ஈடுபடுவதும் நல்லது. 

பரிகாரம்: முருகப்பெருமானை கந்தசஷ்டி பாராயணம் செய்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 25. 

சந்திராஷ்டமம்: 20, 21. 
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மதிப்பு மரியாதை உயரும். பிறருக்கு வாக்கு கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். இருப்பினும் திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே செயல்பட்டால்தான் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் துணிந்து முதலீடுகள் செய்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவார்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். 

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். அவசரமாகச் செய்யும் வேலைகளில் இடையூறுகள் தோன்றும். 
கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்களில் பிரச்னை தோன்றினாலும் முயற்சி வெற்றிப்பாதையில் செல்லும். பெண்மணிகள் இல்லத்தில் நிலவும் சந்தோஷத்தால் உற்சாகம் அடைவர். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். ஞாபக சக்தி வளர விடியற்காலையில் கல்வி பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

பரிகாரம்: திங்களன்று பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 25. 

சந்திராஷ்டமம்: 22, 23. 
 

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசி பழகவும். அன்பையும் பாசத்தையும் வளர்த்துக் கொள்ளவும். உறவினர்களின் உதவியைப் பெறுவீர்கள். தாயாரின் உடல்நலத்தைக் கவனிக்கவும்.

உத்தியோகஸ்தர்களின் எண்ணங்கள் ஈடேறுவதில் இழுப்பறி காணப்படும். சக ஊழியர்களிடம் நட்புடன் பழகுவது நல்லது. வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய முறைகளைக் கையாண்டு வியாபாரம் பெருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பணிகள் அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் சற்று தாமதப்படும்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றிபெற கடும் உழைப்பு தேவை. போராட்டங்களினால் மன உறுதியையும் உற்சாகத்தையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய நண்பர்களால் பலன் காணமுடியும். புதிய படைப்புகளை உருவாக்குவதில் மன உறுதியுடனும் முனைப்புடனும் செயல்பட வேண்டி வரும். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள்.

பரிகாரம்: ராமபக்த ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி  வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 26. 

சந்திராஷ்டமம்: 24, 25.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகள் வந்து போகும். வீண் அலைச்சல்களும் உண்டாகலாம். உடலும் மனமும் சோர்வடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். தொழிலில் திருப்திகரமான லாபத்தைக் காண்பீர்கள். நிம்மதி குறையும். பொருளாதாரம் சீராகவே இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு கூடினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவு வந்துகொண்டிருக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் வரும். வியாபாரிகள் சிறு முதலிடுகளில் ஈடுபட்டால் மேலும் வருமானம் ஈட்டமுடியும். விவசாயிகளுக்கு அமோகமான விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். புதிய குத்தகை எடுக்கலாம். 

அரசியல்வாதிகள் கட்சியில் போட்டிகளையும் வாக்குவாதங்களையும் சந்திக்கலாம். போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். ரசிகர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும். 

பெண்மணிகள் பொருளாதார பலத்தால் திருப்தியடைவார்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பார்கள். மாணவமணிகள் எதிர்வரும் இடையூறுகளைச் சமாளித்தால் வெற்றிவாகை சூடலாம். 

பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கா தேவியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 23. 

சந்திராஷ்டமம்:  26. 

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சுமாராக இருக்கும். தொழிலில் அலைச்சல்கள், குழப்பங்கள், நிம்மதியின்மை, தூக்கமின்மை ஏற்படும். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும். சகோதர வழியில் ஒற்றுமையுடன் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சலுகைகளைப் பெறுவார்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சிறிது சிரமம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். உபரி வருவாய் தரும் பயிர்களைப் பயிரிடலாம்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து சற்று விலகியே இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமப்படுவர். பணவரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது. 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை குறையும். விட்டுக் கொடுத்துச் செல்லவும். பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வார்கள். விடியற்காலையில் யோகா, பிராணாயாமம் செய்வது நல்லது.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்வதும் பழனி முருகரை வழிபடுவதும் நல்லது. 

அனுகூலமான தினங்கள்: 25, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை. 
 

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

புதிய வாய்ப்புகள் தேடிவரும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தேவைகளுக்கு ஏற்ற செலவுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் புதிய உற்சாகமும் சந்தோஷமும் தாண்டவமாடும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டதுபோல் முடியும். உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கும். வியாபாரிகளைத் தேடி பலவகையிலும் லாபம் வரும். வியாபாரத்தில் புதிய வளர்ச்சி தென்படும். விவசாயிகள் சந்தையில் பொருள்களை போட்டிக்கு ஏற்றவகையில் விற்பனை செய்வார்கள். 

அரசியல்வாதிகளின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். புதிய சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வரவேற்புகளைப் பெறுவார்கள். பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவார்கள். பேசும் நேரத்தில் நிதானம் காக்கவும். 

மாணவமணிகளுக்கு சமூகம் மற்றும் அறிவியல் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம்:  பைரவரையும் நவக்கிரகங்களையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 22,  26. 

சந்திராஷ்டமம்: இல்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com