திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 24 உறுப்பினர்கள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 24 பேருடன் கூடிய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை ஆந்திர அரசு புதன்கிழமை காலை வெளியிட்டது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 24 உறுப்பினர்கள் நியமனம்


தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 24 பேருடன் கூடிய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை ஆந்திர அரசு புதன்கிழமை காலை வெளியிட்டது.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் ஏற்படுத்தப்பட்ட குழுக்களின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதற்குப் பின் அக்குழுக்களை ஆந்திர அரசு முற்றிலும் கலைத்தது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவும் கலைக்கப்பட்டது. அதன்பின் அறங்காவலர் குழுத் தலைவராக சுப்பாரெட்டியை ஆந்திர அரசு நியமித்தது. அவர் தன் பதவியை ஏற்று 2 மாதங்கள் முடிவுபெற்ற நிலையில் புதன்கிழமை அறங்காவலர் குழு உறுப்பினர்களை ஆந்திர அரசு நியமித்து அதற்கான அரசாணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 
இதற்கு முன் 16 உறுப்பினர்களுடன் இருந்த அறங்காவலர் குழுவை தற்போதைய ஆந்திர அரசு 24-ஆக உயர்த்தியுள்ளது. இவர்களுடன் ஆந்திர அறநிலையத்துறை தலைமைச் செயலர், அறநிலையத்துறை ஆணையாளர்,  திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி,  திருப்பதி நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் உள்பட 4 பேர் கெளரவ  உறுப்பினர்களாக தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நீடிக்க உள்ளனர். இவர்களையும் சேர்த்து 28 பேர்களுடன் கூடிய அறங்காவலர் குழுவை சுப்பாரெட்டி தலைமையில்  ஆந்திர அரசு நியமித்துள்ளது.
28 பேரில் ஆந்திராவிலிருந்து 8 பேர்,  தெலங்கானாவிலிருந்து 7 பேர்,  தமிழகத்திலிருந்து 4 பேர், கர்நாடகாவிலிருந்து 3 பேர்,  தில்லி,  மகாராஷ்டிரத்தில் இருந்து தலா ஒருவருக்கு உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
தமிழகத்திலிருந்து வைத்தியநாதன்,  என். சீனிவாசன்,  டாக்டர் நிச்சிதா மற்றும் உளுந்தூர் பேட்டை எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரைவில் உறுப்பினர்கள் பதவியேற்புடன் அறங்காவலர் குழு திருமலையில் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com