திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் நடைபெறும். இவ்விழாவானது அக்டோபர் 8-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. 

நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நவரத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள்

செப்.30 - மாலை கொடியேற்றம்

அக்.1 - காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகனத்திலும் உலா

அக்.2 - காலை சிம்ம வாகனம், இரவு முத்துபல்லக்கு வாகனம்

அக்.3 - காலை கற்பகவிருட்ச வாகனம், இரவு சர்வபூபாள வாகனம்

அக்.4 - காலை மோகினி அவதாரம், இரவு கருட வாகனம்

அக்.5 - காலை அனுமன் வாகனம், மாலை தங்கரதம், இரவு யானை வாகனம்

அக்.6 - காலை சூரியபிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம்

அக்.7 - காலை தேரோட்டம், இரவு குதிரை வாகனம்

அக்.8 - காலை சக்ரஸ்நானம், மாலை கொடியிறக்கம் நிகழ்ச்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com