திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் உறியடி திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.  
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் உறியடி திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.  
மேற்குத் தொடர்ச்சி மலையில், திருக்குறுங்குடி பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் திரளான பக்தர்கள் சென்று, நம்பியாற்றில் குளித்து, சுவாமி தரிசனம் செய்வர். 
குறிப்பாக, தமிழ் மாதக் கடைசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். 
இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதக் கடைசி சனிக்கிழமை உறியடி திருவிழா நடைபெறும். அதன்படி, சனிக்கிழமை (செப்டம்பர் 14) உறியடி திருவிழா  நடைபெற்றது. 
இதில் பங்கேற்பதற்காக  வெள்ளிக்கிழமை மாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் இங்கு வந்தனர்.
உறியடி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
மாலையில் உறியடி திருவிழா நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். இரவில் திருமலைநம்பி சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com