செய்திகள்

விநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட லட்டு ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம்

13th Sep 2019 03:00 AM

ADVERTISEMENT


ஹைதராபாதில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு சமர்ப்பிக்கப்பட்ட லட்டுவை ராம் ரெட்டி என்பவர், ரூ. 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
ஹைதராபாதில் உள்ள பாலாப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 21 கிலோ எடை கொண்ட லட்டுவை அவர் ரூ. 17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு பாலாப்பூர் கணபதி லட்டு, ரூ. 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT