செய்திகள்

தலசயனப் பெருமாள் தரிசனம்

13th Sep 2019 03:02 AM

ADVERTISEMENT


ஸ்ரீ ரங்கம் ஆண்டவன் சுவாமிகள் திருவிடந்தையில் சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்டு மாமல்லபுரம் வந்தவர் தலசயனப் பெருமாளை வியாழக்கிழமை தரிசனம் செய்தார். 
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஜீயர் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் 60 நாள்கள் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்டார். அதையடுத்து மாமல்லபுரம் வந்தவர் மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாளை தரிசனம் செய்தார். முன்னதாக, கோயில் அருகில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், அர்ச்சகர்கள் அவருக்கு கும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனர். ஜீயருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் நடைபெற்றன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT