செய்திகள்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

13th Sep 2019 03:01 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் அருகேயுள்ள அய்யம்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன்  கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடந்தது.
அய்யம்பேட்டை வடக்குத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 10 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மகா பூர்ணாஹுதி, தீபாராதனைக்குப் பிறகு சிவாச்சாரியார்களால் புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. 
விழாவில்  அய்யம்பட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களும் அம்மனை தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT