வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

வேலூர் தன்வந்திரி பீடத்தில் நாளை பௌர்ணமி யாகங்கள்!

DIN | Published: 12th September 2019 03:12 PM

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்களின் நலன் கருதி பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால ஹோமம் நடைபெற உள்ளது.

கந்தர்வ ராஜ ஹோமம்

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. மேலும் பீடத்தில் சென்ற 15 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.

சுயம்வர கலாபார்வதி யாகம் 

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

சந்தான கோபால யாகம்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அன்னியோன்னியம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

இந்த ஹோமங்களில் பங்கேற்கும் நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்க உள்ளார். மேலும் 468 சித்தர்கள் ஆசீர்வாதமும் கிடைக்கும். இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் தானம் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Pournami yagam தன்வந்திரி பீடம் பௌர்ணமி யாகம் arogya peedam

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா