வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

மீனாட்சியம்மன் கோயிலில் தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம்!

Published: 12th September 2019 06:28 PM

 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வரும் தீபாவளி முதல் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக தலா ஒரு லட்டு  பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயிலில் தினசரி அதிகாலை நடை திறந்ததில் இருந்து இரவு நடை சாத்தும் வரை  இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

வரும் தீபாவளித் திருநாள்(அக்டோபர் 27) முதல் லட்டு பிரசாத விநியோகம் அமலுக்கு வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்குவதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : பிரசாதம் இலவச லட்டு மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு Madurai Meenakshiman temple

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா