வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

ஹயக்ரீவர் ஜயந்தி விழா

DIN | Published: 12th September 2019 02:42 AM
 சிறப்பு அலங்காரத்தில்  ஹயக்கிரீவர்.


செட்டிபுண்ணியம் தேவநாதசுவாமி கோயிலில் ஹயக்ரீவர் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. 
செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியம் கிராமத்தில்  ஹயக்ரீவர் கோயிலில் ஹயக்ரீவர் 
ஜயந்திவிழாவையொட்டி ஹோம பூஜைகள், கலச பூஜைகள், திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சங்கல்பம் செய்து ஹயக்ரீவரை வழிப்பட்டனர். 
பக்தர்கள், தங்களது குழந்தைகளுடன் வந்து விளக்கேற்றியும், நோட்டுபுத்தகங்கள், எழுதுபொருள்களை ஹயக்ரீவர் பாதத்தில் வைத்து வாங்கிச்சென்றனர். பக்தர்களுக்கு பேனா,  பென்சில் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணி, கோயில் பணியாளர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா