வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

DIN | Published: 12th September 2019 02:41 AM


காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை மகாலிங்க நகரில் உள்ள வரசித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
வரசித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.
இதனையடுத்து புதிதாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக செய்யப்பட்டிருந்த நவகிரஹ சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. 
செவ்வாய்க்கிழமை மாலை முதலாம் கால யாகசாலை பூஜைகளும், புதன்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. 
பின்னர், யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்டு, திருக்கோயில் ராஜ கோபுர கலசத்தில் புனித நீர் வார்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மதியம் ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.  
விழாவில், நசரத்பேட்டை, மகாலிங்க நகர், முருகுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா