வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN | Published: 12th September 2019 02:45 AM
மகா காளியம்மனுக்கு அபிஷேகம் செய்ய பால்குடங்களை ஏந்தி வந்த பக்தர்கள்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் 27 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சிறுகாவேரிப் பாக்கம் ஜெ.ஜெ.நகரில் ஜெகதீஸ்வரி மாரியம்மன் மற்றும் நாக கன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் 27 அடி உயரத்தில் மகா காளியம்மன் சிலை 18 திருக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கின.
புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, மகா காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகளும் நடந்தன.
சிறுகாவேரிப்பாக்கம் உள்பட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் 108 பால்குடங்களை எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மதியம்  அன்னதானமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜி.ஜெயதேவ்  சுவாமிகள் தலைமையிலான  விழாக் குழுவினர்  செய்திருந்தனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா