வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

திருவாரூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

DIN | Published: 12th September 2019 06:04 PM

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மகாகும்பாபிஷேக பெருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

மன்னார்குடி தாலுக்கா, நெ. 43 பள்ளிவர்த்தி கிராமத்தில் அருள்மிகு கல்யாண விநாயகர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள், பூரண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் செப்டம்பர் 11-ம் தேதி(நேற்று), காலை நடைபெற்றது.

இவ்வாலயங்கள் ஹரிச்சந்திரா நதிக்கரையில் திருக்கொள்ளிக்காடு அருகில் உள்ளது. கல்யாணமாகாத ஆண் / பெண்கள் இங்குள்ள கல்யாண விநாயகரை தரிசித்து அருகிலுள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபட்டால் உடனடியாக திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.

தகவல், பட உதவி - பி. சாம்பசிவம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா