வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

அடிமைத் தொழிலா! சொந்தத் தொழிலா!! கூட்டுத் தொழிலா!!! எனக்கு எது என்று சொல்லுமா ஜோதிடம்?

By - ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்| Published: 10th September 2019 01:33 PM

 

அது என்ன அடிமைத் தொழில்? ஆம், அரசு உத்தியோகத்தைத் தான் அனைவரும் அடிமைத் தொழில் என்பர். காரணம் அங்கு யாருமே முதலாளி கிடையாது. ஆம், அனைவரும் பொறுப்பாளர்கள் தான். அது உண்மையிலேயே சிறந்த ஒன்று தான். யார் வேண்டுமானாலும் யாரையும் கேள்வி கேட்க முடியும். செய்தொழிலில் பயம் நிச்சயம் இருந்து கொண்டே இருக்கும். 

சொந்தத் தொழில் என்றால் அதில் முதலீடு மற்றும் நமக்குத் தெரிந்த தொழில் ஆகவும், மற்றும் அதன் மொத்த விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, அதில் பயன்படுத்தப்போகும் மூலப்பொருள் பெறும் இடம் அதன் தன்மைகள் மற்றும் அதனை மேம்படுத்தப்படுத்தக்கூடிய திறனை அறிந்தவர்களின் கூட்டுத் தேவை. பணி செய் திறன் பெற்றவர்கள் கூட்டுத் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தத் தொழிலில் நாம் வெற்றி அடைவோமா அல்லது திக்கு தெரியாத காட்டில் விட்டது போல் சிக்கி விடுவோமா என்றெல்லாம், நமக்கு சாதகமான தொழில் தான் நாம் எடுத்திருக்கிறோமா எனத் துல்லியமாய் அவரின் ஜாதகம் கூறிவிடும். இதில் கூட்டுத் தொழிலா அல்லது தனியாகச் சிறப்பாக நடத்த இயலுமா என்றும் பார்த்தாகவேண்டும். 

அரசு தொழில் யாருக்கு?

பின்வரும் தொடர்புகள் அல்லது கிரக நிலைகள் இருப்பின் அவருக்கு அரசு வேலை நிச்சயம்.

1. செவ்வாய், 10ல் இருந்தாலும் அல்லது 10ஆம் இடத்தைப் பார்த்தாலும்.

2. செவ்வாய் 3, 6, 10 மற்றும் 11-ம் இடத்திலிருந்து, குரு பார்க்க அரசு வேலை கிடைக்கும்.

3. சூரியன் நல்ல ஆதிக்கம் பெற்றுக் கெட்ட இடத்திலிருந்தாலும் அல்லது கெட்ட ஆதிக்கம் பெற்று நல்ல இடத்திலிருந்தாலும் (செவ்வாயும் பலம் பெற்றிருக்க வேண்டும்.) 10 ஆம் இடத்துடன், 10ஆம் அதிபதியுடன் சூரியன், செவ்வாய், குரு தொடர்பு இல்லாவிட்டால் அரசுப் பணி இல்லை. 

சொந்த தொழில் யார் செய்வார்கள்?

10-ஆம் அதிபதி, சுபராகி, கேந்திர, திரிகோணம் பெற்று பலமுடன் காணப்பட்டால், நல்ல தொழில் அமைந்து ஜாதகரின் வாழ்வு சிறக்கும். தன ஸ்தான அதிபதியும், லாப ஸ்தான அதிபதியும் பலம் பெற்றிருந்தால், நல்ல தொழில் அமையும். 10ஆம் அதிபதி, 10ல் ஆட்சிப் பெற்றிருந்தாலும் 10ஆம் அதிபதி பலம் பெற்று கேந்திர திரிகோணத்தில் இருந்தாலும், சொந்த தொழில் செய்வார்கள். அதே சமயம் 10ஆம் வீட்டில் 6, 8, 12 ஆம் அதிபதிகள் இருந்தாலோ அல்லது 10ஆம் இடத்தைப் பாவிகள் பார்த்தாலோ, ஜாதகருக்கு, நல்ல தொழில் அமையாது.

கூட்டுத்தொழில் யாருக்கு அமையும்?

7ஆம் இடம் பலம் பெற்று அதே சமயம் 1, 10 அதிபதிகள் சேர்ந்தோ அல்லது பரிவர்தனைப் பெற்றோ இருந்தால், கூட்டுத்தொழில் அமையும்.7 ஆம் வீட்டிற்கு, சுபர் பார்வை இருந்தால். 10 ஆம் அதிபதியைக் காட்டிலும், 7 ஆம் அதிபதி பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு, கூட்டுத் தொழில் தான் சிறந்தது எனலாம்.

யாருக்கு, வியாபாரம் நன்கு வரும்?

வியாபாரம் செய்ய தைரியம் வேண்டும். தைரியத்தைக் கொடுப்பவர், செவ்வாய், அவர் தசா நாதன், புத்தி நாதனுடன் தொடர்பு கொள்ளும் போது தான் ஒருவர் வியாபாரம் துவங்க வேண்டும். 7ல் புதன் இருந்தால் வியாபாரம் நன்கு நடுக்கும். சனி 7ல் இருந்தால், நஷ்டம் ஏற்படும். ஒருவருக்கு, 6, 11 வீடுகளைக் குறிக்கும் தசாபுத்தியில் ஒருவருக்கு லாபம் ஏற்படும். அதுவே, ஒருவருக்கு 5, 12ஆம் வீடுகளைக் குறிக்கும் தசாபுத்தியில் நஷ்டம் ஏற்படும். 

தொழில் நிர்ணயம் செய்வது எவ்வாறு?

10ஆம் அதிபதி அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அந்த வீட்டின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் வீற்றிருக்கிறாரோ, அந்த நட்சத்திர அதிபதி இவர்களில் யார், பலம் பெற்றுள்ளாரோ, அவரது காரகத்துத் தொழில் செய்வது சிறப்பு ஆகும்.

ஒரு சில கிரக இணைவும், அவற்றால் பெறும் சாதகமான தொழில் அமைப்பும்:-

பத்திரிகை ஆசிரியர்:-
புதன்: பத்திரிகை
செவ்வாய்: மெஷின்
எனவே இந்த சேர்க்கையுள்ளவர்கள், பத்திரிகை ஆசிரியர் ஆவார்.

தையல்காரர் :- 
துணி வகைகள்: சுக்கிரன்
மெஷின்: செவ்வாய்
உடல் உழைத்து தைத்தால்: சனி 

வெளிநாட்டில் உத்தியோகம் அல்லது தொழில் செய்பவருக்கான, கிரக நிலைகள் :-

மேற்கூறிய 4 விதிகளில் ஒரு விதி மட்டும் அமைந்திருந்தால் கூட அந்த ஜாதகர் வெளி நாட்டில் தொழில் அல்லது உத்தியோகம் அமையும். மேலே கூறப்பட்டவை ஒரு சிலவே, இன்னும் நிறைய விதிகள், விதி விலக்குகள் உள்ளன. அவற்றை நன்கு அறிந்த, அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகினால், அவரின் அறிவுரை வாழ்வில், நிச்சயம் வெற்றி பெறுவதோடு, நல்ல தொழில் செய்வதற்கு ஏதுவாகும்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்
தொடர்புக்கு : 98407 17857

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : சொந்த தொழில் யார் செய்வார்கள்? கூட்டுத்தொழில் யாருக்கு அமையும்? யாருக்கு வியாபாரம் நன்கு வரும்?

More from the section

ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா
ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி என்கிறது ஜோதிடம்!
புரட்டாசி மாதப் பலன்கள்: பார்த்தால் பசுவாம், பாய்ந்தால் புலியாம் இந்த ராசிக்காரர்கள்?