செய்திகள்

68,466 ஆர்ஜித சேவா டிக்கெட் வெளியீடு

7th Sep 2019 03:10 AM

ADVERTISEMENT


திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 68,466 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு டிசம்பர் மாதத்திற்கான 68,466 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது. இதை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். 
இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கபட்டு வருகிறது. இதை பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, கைபேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்க பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். 
தகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாட்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு வழங்கிறது. நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT