செய்திகள்

பிரம்மோற்சவம்:ஆர்ஜித சேவைகள், முதன்மை தரிசனம், வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து

7th Sep 2019 03:11 AM

ADVERTISEMENT


திருமலையில் நடைபெறவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அந்நாட்களில் ஆர்ஜித சேவைகள், முதன்மை தரிசனங்கள், வி.ஐ.பி பிரேக் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை அன்னமய்யபவனில் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்தார். நிகழ்ச்சி நிறைவுக்கு பின் அவர் கூறியதாவது:
திருமலை ஏழுமலையானுக்கு வரும் செப்.30-ஆம் தேதி முதல் அக்.8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் செப்.20-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும். 
ரத்து:பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையானைத் தரிசிக்க மட்டுமல்லாமல், வாகன சேவைகளைக் காணவும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருவர். அதனால் அந்நாட்களில் ஆர்ஜித சேவைகள், முதன்மை தரிசனங்கள்,  வி.ஐ.பி. பிரேக் தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புரோட்டோகால் வி.ஐ.பி.க்கள் நேரில் வந்தால் மட்டுமே தரிசனம் வழங்கப்படும். 
செப்.29-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரை மூத்த குடிமக்கள்,  மாற்றுத்திறனாளிகள், கைக் குழந்தைகளின் பெற்றோர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 அதேபோல் செப்.28-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரை தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களின் தரிசனம், அவர்களுக்கு வாடகை அறை வழங்குதல் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பிரம்மோற்சவ நாட்களில் நேரடியாக வரும் வாடகை அறை நன்கொடையாளர்களுக்கு மட்டுமே வாடகை அறை வழங்கப்படும். அக்.4-ஆம் கருடசேவையை முன்னிட்டு அக்.2-ஆம் தேதி முதல் அக்.4-ஆம் தேதி வரை வாடகை அறை நன்கொடையாளர்களுக்கு அறைகள் வழங்கப்பட மாட்டாது. 
அன்னதானம்: சாதாரண நாட்களில் திருமû:லயில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். பிரம்மோற்சவ நாள்களில் காலை 8 மணிமுதல் இரவு 11.30 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். அக்.4-ஆம் தேதி கருட சேவை அன்று நள்ளிரவு 1 மணிவரை அன்னதானம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT