வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கரியம் செய்தவர் திருமலைநம்பி: செயல் இணை அதிகாரி பசந்த்குமார்

DIN | Published: 07th September 2019 03:12 AM
சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்ட தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாருக்கு சடாரி சாற்றும் அர்ச்சகர்கள்.


திருமலை ஏழுமலையானுக்கு தன் கைகளால் தீர்த்த கைங்கரியம் செய்து வந்தவர் திருமலைநம்பி என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமார் தெரிவித்தார்.
திருமலையில் வெள்ளிக்கிழமை காலை திருமலைநம்பியின் 1046-ஆவது அவதாரோற்சவம் நடைபெற்றது.  திருமலைநம்பி கோயிலில் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழுமலையானுக்கு கைங்கர்யங்கள் செய்ய திருமலைநம்பி 973-ஆம் ஆண்டு திருமலைக்கு வந்தார். அவர் தன் பாட்டனார் யமுனாசாரியாரின் உத்தரவின்படி திருமலைக்கு வந்து பாபவிநாசம் தீர்த்தத்திலிருந்து தினமும் அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு வந்து ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கரியம் செய்து வந்தார். 
முதுமையிலும் அவர் இதை விடாது கடைப்பிடித்து வந்தார். அவர் மீது கருணை கொண்ட ஏழுமலையான் அஞ்சனாத்திரி மலையில் உற்பத்தியாகும் ஆகாசகங்கை தீர்த்தத்திலிருந்து நீர் கொண்டு வந்து தனக்கு அபிஷேகம் செய்யுமாறு பணித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. 
திருமலைநம்பி ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யத்துடன், புஷ்ப கைங்கர்யம், மந்திரபுஷ்ப கைங்கர்யம், வேதபாராணய கைங்கர்யங்களை செய்து ஏழுமலையானின் பரம பக்தராக விளங்கினார்.
அவர் ஸ்ரீமத் ராமாநுஜருக்கு ராமாயணத்தில் உள்ள 18 ரகசியார்த்தர்ங்களை போதித்து விஷ்டாத்வைத்யம் மதத்திற்கு அடித்தளம் அமைத்தார் என்று கூறினார். இந்த ஆராதனை உற்சவத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 16 பண்டிதர்கள் கலந்து கொண்டு சரணாகதி தத்துவம் குறித்து உரையாடினர்.  இதில் திருமலைநம்பி வம்சத்தைச் சேர்ந்த தாத்தாசார்ய கிருஷ்ணமூர்த்தி. ரங்கநாதன், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா
ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி என்கிறது ஜோதிடம்!
புரட்டாசி மாதப் பலன்கள்: பார்த்தால் பசுவாம், பாய்ந்தால் புலியாம் இந்த ராசிக்காரர்கள்?