செய்திகள்

திருமணம் உண்டா இல்லையா? ஜோதிடம் சொல்வதென்ன?

4th Sep 2019 12:34 PM | - ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்

ADVERTISEMENT

 
எனக்கு திருமணம் உண்டா இல்லையா? பொதுவா எல்லா இளைஞர், இளைஞிகளுக்குத் தோன்றும் கேள்வியாகத்தான் இது இருக்க முடியும். சிலர் தாமாகவே திருமணத்துக்கு, பெண்ணை / ஆணை தேர்ந்தெடுத்துப் பெற்றோர்களின் சம்மதத்திற்கு காத்திருந்தாலும் அவர்கள் மனதில் சிறு இழை ஓடுவது அம்மா, அப்பா ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ அப்புறம் தமது காதலர் வீட்டில் ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ, இப்படிப் பல கேள்விகளை முன்னிறுத்தி, எனக்குத் திருமணம் உண்டா அல்லது இல்லையா என்கிற பாணியில் இருக்கும்.  

அதேபோல், காதலிக்காதவர்களும் எனக்கு அப்பா, அம்மா திருமணம் செய்வார்களா, இல்லையா எனவும் மனது ஏங்கித் தவிக்கத்தான் செய்யும். அப்படியே அவர்கள் இஷ்டப்படி செய்வித்தாலும், வருபவர் என்னை அன்பாகக் கவனிப்பவராக வருவாரா, அவர் சமூக அந்தஸ்து உள்ளவராக இருப்பாரா, அவரின் நிறம் மற்றும் அழகு எவ்வாறு இருக்கும். அவரின் கவர்ச்சித் தன்மை, ஈர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையுமா என்றெல்லாம் எண்ணத்தோன்றும்.

கற்பு நெறியை பாரதியார் பொதுவில் அதாவது, ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்பார். அது நிச்சயம் சரிதான். அதற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் பெருந்தகை, தமது திருக்குறளில், "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை" என்பார். ஒருவருக்கு, மனைவி கற்புடையவளாக வாய்த்து விட்டால், அவரிடம் இல்லாத செல்வமே இல்லை; அதுபோல, ஒருவருடைய மனைவி கற்பிழந்தவளாக இருந்து விட்டால், அவனது வீட்டில் எத்தனைக் கோடி செல்வம் இருந்தாலும் அந்த வீட்டில் உள்ளது என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை என்கிறார், திருவள்ளுவர். 

ஒரு ஆணின் கற்பு நெறிக்கு அவனின் செய்கைகளே அவன் வகிக்கும் பதவி, பெறும் பணம் போன்றவை மட்டுமே காரணிகளாக அமைந்துவிடும் என்று சொல்ல முடியாது, அவனுக்கு வாய்க்கும் மனைவியால் கூட அவனின் நிலை மாறக்கூடும். அதே போல், ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அவளுக்கு அமையும் ஆணின் அதாவது அவளின் கணவானாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், புதிரான உறவு முறைகளோடு பொழுது போக்குக்காக வாழும் பலபேர் இன்றைய சமுதாயத்தில் வாழத்தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட கலாசாரச் சீரழிவில் சிக்கி வாழ்க்கை இழந்து, இல்லற சுகம் எட்டாக்கனி ஆகிவிட்டதே என ஏங்கும் பெண்களின் ஜாதக அமைப்புகளை இனம் காட்ட முடியுமா என்று கேட்டால், முடியும் என்றே ஜோதிடம் கூறும். 

ADVERTISEMENT

ஒருவருக்கு, அவர்தம் ஜனன கால ஜாதகத்தில், அவரின் லக்கினம், சுப கிரகங்களின் தொடர்பும், இலக்கினாதிபதி பலமாக இருந்தாலும், அவருக்கு திருமணம் நடக்கும்.  லக்கினாதிபதி, ஜாதகரைக் குறிக்கும். 2ஆம் இடம் குடும்பத்தைக் குறிக்கும். 7ஆம் இடம் திருமணம் செய்யும் நபரைக் குறிக்கும், அதாவது பெண் ஜாதகருக்கு வரப்போகும் கணவனைப்பற்றி. ஆண் ஜாதகர் என்றால் அவருக்கு வர இருக்கும் மனைவியைக் குறிக்கும். இதில் நவாம்ச லக்கினத்திற்கு, சுபர் தொடர்பானால், திருமணம் நிச்சயம் நடக்கும். இதே போல் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், 2 மற்றும் 7ஆம் இடத்திற்கு (வீட்டிற்கு) சுபர்கள் தொடர்பு இருந்தால் திருமணம் நடக்கும். 

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 1, 2, 7ஆம் இடங்கள், இம்மூன்றும் பாதிக்கப்பட்டால், திருமணம் நடக்காது. மேலும், பிறப்பு ஜாதகத்தில், 1 மற்றும் 7 ஆம் அதிபதிகள், நவாம்சத்தில் உள்ள இடத்தை காணவேண்டும். அவைகள், அந்த அதிபதிகள், முறையே 2, 6, 8, 12ஆம் இடங்களில் பிறப்பு ஜாதகத்திலும் மற்றும் நவாம்சத்தில் இருந்தால், திருமணத்தடையை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு இடத்தில் நன்றாக இருந்தால் திருமணம் நடக்கும். ஆனால், பிரச்னை உண்டு. சுக்கிரன் பாதிக்கப்பட்டால், திருமணத்தடை ஏற்படுத்தும். பிறப்பு ஜாதகம் மற்றும் நவாம்ச ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தால், திருமணம் நடக்கும். 

இதைத் தவிர, திரிம்சாம்சத்தை D-30 பார்க்க வேண்டும். த்ரிம்சாம்ச லக்கினத்துடன் சுபர்கள் தொடர்பானால் திருமணம் உண்டு. சுபர், பிறப்பு லக்கினத்துடன் தொடர்பானால் நிச்சயம் இளமை (சரியான வயதில்) மணம் உண்டு. திரிம்சாம்சம் பாதிக்கப்பட்டால், திருமணம் தடைப்படும். இதுபோல், ஒருவருக்கு, தாமத திருமணமா, பல மணம் ஏற்படும் அமைப்பை உடையவரா, அன்பாக கவனிக்கும் கணவர் / மனைவி அமைவாரா, நல்ல நிறம் மற்றும் அழகான துணைவர் கிடைக்குமா, திருமணத்திற்குப் பிறகு நல்வாழ்க்கை அமையுமா என்பனவற்றை ஜோதிடம் மூலம் அறிய இயலும். இவை அத்தனையும், நமது மானிட சமுதாயத்திற்கு நமது மூதாதையர் மற்றும் ரிஷிகளால் கூறப்பட்டவை எனும் போது ஆச்சரியம் கலந்த உண்மையாக உள்ளது. 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம்

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

Tags : பெண் மாப்பிள்ளை காதல் அப்பா அம்மா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT