செய்திகள்

திருச்சானூர் பவித்ரோற்சவத்துக்கான சுவரொட்டி வெளியீடு

4th Sep 2019 02:26 AM

ADVERTISEMENT


திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு நடைபெற உள்ள பவித்ரோற்சவத்துக்கான சுவரொட்டிகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வரும் செப். 12 முதல் 14-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. ஆண்டு முழுவதும் கோயிலில் நடந்த கைங்கரியங்களில் குறை இருப்பினும், அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்களால் ஏற்பட்ட தோஷங்களைக் களையவும் தேவஸ்தானம் இந்த வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. அதற்கான சுவெராட்டிகளை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டார்.
இந்த உற்சவத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ரூ. 750 செலுத்தி 3 நாள்களும் கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டு, 2 வடை பிரசாதமாக வழங்கப்படும். பவித்ரோற்சவத்தை முன்னிட்டு செப். 10-ஆம் தேதி கோயில் முழுவதையும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதனால் அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை தாயார் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் பவித்ரோற்சவம் நடைபெற உள்ள நாள்களிலும் ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT