வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

சங்கிலி பூதத்தார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

Published: 04th September 2019 11:02 AM

 

திருநெல்வேலி நகரம் ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று(செப். 4) நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம், வேதிகார்ச்சனை மூல மந்திர ஜபம், ஹோமம், த்ரவ்யாஹுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெற்றது. 

காலை 6.30 மணிக்கு கடம் புறப்பாடு, விமான அபிஷேகம், மூலாலய மூர்த்திக்கு புதன் ஹோரையுடன் கூடிய சிம்ம லக்கனத்தில் ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை, மகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் லலிதா ஸகஸ்ர நாம அர்ச்சனை, சோடஷ உபசார தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : கும்பாபிஷேகம்

More from the section

ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா
ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி என்கிறது ஜோதிடம்!
புரட்டாசி மாதப் பலன்கள்: பார்த்தால் பசுவாம், பாய்ந்தால் புலியாம் இந்த ராசிக்காரர்கள்?