செய்திகள்

கோயிலில் ரிஷி பஞ்சமி வழிபாடு

4th Sep 2019 02:26 AM

ADVERTISEMENT


குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள பாவனா ரிஷி கோயிலில் ரிஷி பஞ்சமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் திதி நாள் ரிஷி பஞ்சமி ஆகும். இந்த நாளில் பெண்கள் விரதமிருத்து சப்த ரிஷிகளுக்கும் தீபமேற்றி வழிபாடு செய்தால் பாவங்கள் அகன்று, பிதுர் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 
அதன்படி ஏராளமான பெண்கள் விரதமிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் பாவனா ரிஷி கோயிலில் உள்ள சப்த ரிஷிகளான கஸ்யபர், அத்திரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோருக்கு தீபமேற்றி, வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT