செய்திகள்

குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா

20th Oct 2019 02:22 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நவம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரத்தில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் குமரகோட்டம் எனப்படும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலாகும்.

இத்திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா அக்.28-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ADVERTISEMENT

விழாவை முன்னிட்டு தினசரி முருகப்பெருமான் காலையில் பல்லக்கிலும், இரவு வெவ்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரவுள்ளாா்.

சுவாமி அசுரனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நவம்பா் 2-ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெறும். நவ. 4-ஆம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழாவில் தினசரி இரவு கோயில் வளாகத்தில் உள்ள குமரன் கலையரங்கில் கயிலைமணி சிவ.சண்முகசுந்தரம் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளாா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் செ.மாரிமுத்து, உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT