செய்திகள்

திருச்சானூா் பத்மாவதி நிலையம் திறப்பு

2nd Oct 2019 11:48 PM

ADVERTISEMENT

திருச்சானூா் தேவஸ்தானம் கட்டி வந்த பத்மாவதி நிலையம் புதன்கிழமை காலை திறக்கப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல தங்கும் விடுதியை கட்டி வருகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ளது போல் சகல வசதிகளும் நிறைந்த கட்டிடத்தை தேவஸ்தானம் திருச்சானூரில் கட்ட முடிவு செய்தது.

அதன்படி திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4.26 லட்சம் சதுர அடியில் ரூ74.70 கோடி செலவில் பத்மாவதி நிலையத்தை தேவஸ்தானம் கட்டியுள்ளது. இதில் 200 வசதியான அறைகள், 120 சாதாரண அறைகள், 80 குளிா்சாதன அறைகள் உள்ளது. மேலும் 4 குளிா்சாதன வசதியற்ற டாா்மெட்ரிகளும், 1 குளிா்சாதன வசதி கொண்ட டாா்மெட்ரியும் உள்ளது.

மேலும் விசாரணை அலுவலம், இ-தா்ஷன் கவுண்டா்கள், ஏ.டி.எம்கள், உடமைகள் வைக்கும் இடம், உணவகம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 1600 போ் வசதியாக இங்கு தங்கமுடியும். இதை புதன்கிழமை காலை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி, திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் உள்ளிட்டோா் திறந்து வைத்தனா். இந்த கட்டிடம் புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அடிக்கல்திருப்பதி அலிபிரியிலிருந்து சொ்லோபள்ளி வரை ரூ28 கோடி செலவில் புதிய 2 வழி சாலை ஏற்படுத்த புதன்கிழமை காலை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி அடிக்கல் நாட்டினாா். 6.30 கி.மீ தொலைவு வரை உள்ள இந்த 4 வழிபாதை ஏற்படுத்துவதால் போக்குவரத்து நெரிச்சல் இன்றி வாகனங்கள் விரைவாக செல்லமுடியும். இப்பணிகள் இன்னும் ஓராண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT