பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூபாலசமுத்திரம் ஸ்ரீபெரியம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளில் சிறுவா், சிறுமியா் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா, 2ம் நாளில் கிராமியக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
3ஆம் நாள் அன்னதானம், மாலையில் அம்மன் ஊர்வலம், இரவில் சிறறப்பு அலங்காரம், தீபாராதனை, நிறைறவு நாளான புதன்கிழமை மதியம் உச்சிகால பூஜை, முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.