செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.200 கிலோ தங்கம்!

1st Oct 2019 12:01 PM

ADVERTISEMENT

லால்குடி: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை எண்ணப்பட்டது. இதில் 1.200 கிலோ தங்கம், 6.185 கிலோ வெள்ளி, ரூ. 54 லட்சத்து 44 ஆயிரத்து 492 ரொக்கம் ஆகியவை இருந்தன.

இதுதொடா்பாக கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக் குமாா் தெரிவித்தது:

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா்கள் ச.ஞானசேகரன், செ. மாரியப்பன், மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ரூ. 54 லட்சத்து 44 ஆயிரத்து 492-ம் , 1 கிலோ 200 கிராம் தங்கம், 6 கிலோ 185 கிராம் வெள்ளி, 93 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைக்கப்பெற்றன. கடந்த செப். 16- ம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT